இங்கு மற்றவர்கள் கூறியது போன்று ஒரு விடயத்தை தெரிந்து கொள்ள அதில் பங்குபற்ற வேண்டும் என்று அவசியம் இல்லை. தெரியாத ஒன்றை தெரிந்து கொள்ளும் போது நமது அறிவுத்திறன் கூடும். அதில் தவறு ஒன்றும் இல்லை.
Printable View
ஒன்றை பற்றி தெரிந்து கொள்வதை விட அதை செயல் மூலம் பெறுதல் என்பது மிகவும் பிரயோசனமான ஒன்றாக இருக்கும் என்பது எனது கருத்து
உங்களுக்கு இது பொருந்தினால் எடுத்து கொள்ளுங்கள் இல்லை என்றால் விட்டு தள்ளுங்கள். நம் தமிழானது மிகவும் அற்புதமானது. என் என்றால் ஒருவர் கூறும் கருத்தினை எந்த விதமாகவும் மாற்றி தருகின்றது.
முதலில் நீங்கள் அதில் பங்குபற்றி உள்ளீர்களா?
மீண்டும் மீண்டும் வாசித்து பாருங்கள் நான் எந்த தொனியில் கேட்டேன் என்று உங்களுக்கு புரியும்.
எங்கே இதை நீங்கள் கொஞ்சம் விளங்கி கொள்ளுங்கள்,
"பேச வேண்டிய நேரத்தில் நாம்
பேசாமல் இருந்துவிட்டால்
பேசக்கூடாத நேரத்தில்
பேசக்கூடாதவர்கள்
பேசக்கூடாதவற்றை
பேசிவிடுவார்கள்."
குறிப்பு: வேகமாக வாசித்து பார் நண்பி, அப்பொழுது தெரியும் நம் தமிழின் அர்த்தம் எப்படி வேறுபடும் நம் எண்ணத்திற்கு ஏற்ப.