Quote Originally Posted by Hariny View Post
நான் ஒரு அலுவலகத்தில் வேலை செய்கிறேன் . எனக்கு மேல் அதிகாரிகள் தரும் பணியை நான் முகம் சுளிக்காமல் செய்கிறேன் . அதே போல் என்னுடன் பணிபுரியும் பணியாளர்களுக்கு நான் பணி ஒதுக்கினால் அவர்கள் அப்பணிகளை ஒற்றுமையுடனும் கடமையுடனும் செய்து தருவதில்லை. எனவே நான் அவர்களுக்கு எவ்வழி மூலம் அணுகி வேலை செய்ய வைப்பது?
நீங்கள் எதிர்பார்ப்பது சரியான தொன்றாகும். ஆனால் வேலை செய்யும் பணியாளருடைய இடத்தில் இருந்து சில சமயங்கள் பார்க்க வேண்டும். அவர்களின் மன நிலை அறிந்து நீங்கள் அவர்களுக்கு ஏற்ப இசைந்தால் அவர்கள் உங்களுடன் இசைவர்கள். அவர்களும் உங்களுக்கு ஏற்ப உங்களுடைய பணிகளை செய்வார்கள்.