
Originally Posted by
Dhiya
எல்லோருக்கும் பிடித்தமான வார்த்தைகள்தான்...
ஆனால்அவை எனக்குமட்டும்
வெறுத்துப்போய்விட்டதே...
எண்ணிக்கைகளுக்காகமட்டுமே
என்வரவுகள் உறுதிப்படுத்தப்படும்...
அதுவும்
அவர்கள் குப்பைகளாக்கியதை...
(இ/அ)வர்கள் குழந்தைகளாக்கியதால்...
நாங்கள்
இறைவனின் குழந்தைகள் என்பதாலோ என்னவோ...
எவரும் எங்களை வீட்டுக்கு அழைத்துச்செல்ல
விரும்புவதில்லை...
மருந்துகளைநான்
ஒருபோதும் வெறுத்ததில்லை...
ஏனென்றால்
என்தேகங்களின் சூடுகளை
வெற்று கைகளைவிட
வெப்பமானிகளே தீர்மானிக்கின்றன...
என்கோபங்களை
சோற்றுப்பருக்கைகள் ஒருபோதும் பார்த்ததில்லை...
அவைதான் எனக்காகவென தனியாக
எடுத்துவைக்கப்படுவதில்லையே...
அழுகைகளை புதைப்பதற்குகூட நான்மடிகளை தேடியதில்லை...
அந்தநேரத்தில் என்தலையணைகளும்
திருட்டுப்போய்விட்டால்...
அப்போதைய
அவர்களின் உடற்பசிகளின் தீர்விற்காக..
இப்போது
எங்களின் குடற்பசிகளையல்லவா
திண்ணகொடுத்துக்கொண்டிக்கிறோம்...
அவள்...
என்னுடனான தொப்புள்கொடியை அறுத்தெறிந்ததற்காய்
நான்ஒருபோதும் வருத்தப்படவில்லை...
அதை...
எனக்குதூக்குகொடி ஆக்கவில்லை என்பதே என்கோபம்...
நான் எப்போதும்
வெறுப்பதையே விரும்பிக்கொண்டிருப்பேன்...
நாங்கள்தான்
எங்கோஒரு காதலின்முடிவில்
உருவான தொடக்கங்களாயிற்றே...
வேருடன் தறிக்கப்பட்ட மரங்களுக்கு...
அதன் பூக்களை பறிப்பதென்பது
ஒருவலியாக தெரியாது...
Bookmarks