தவறை ஏற்று கொண்டாலே பாதி பிரச்சனைகள் சுபமாக முடியும் நண்பி.. அதற்காக நீ செய்யாத ஒன்றிக்காக உன்னை விட்டு கொடுக்காதே.. பேசவேண்டிய நேரத்தில் பேசி தான் ஆகா வேண்டும். உன் தவறை நீ ஏற்று கொண்டால் சமுதாயத்தில் நீ ஒரு நல்ல மனிதனாக இருப்பாய்.
நீ கேக்கலாம் இது எனது வாழ்க்கை எனக்கு பிடித்தால் போலத்தான் நான் வாழ முடியும் சமுதாயத்திற்காக வாழ முடியாது என்று. முதலில் நீ ஒன்றை புரிந்து கொள்ள வேண்டும், நாம் வாழ்வது நமக்கான ஒரு தனி உலகம் இல்லை. இங்கு நாம் பல்வேறுபட்ட மனிதர்களுடன் வாழ்கிறோம் எனவே நாம் சில விடயங்களில் பொதுவாக தான் சிந்தித்து செயல் பட வேண்டும் அது தான் மிகவும் ஒரு புத்திசாலித்தனம்.
ஒரு முறை நீ உன் தவறை ஏற்று கொண்டு பார் மற்றவர்கள் உன் மீது வைத்து இருக்கும் மரியாதையை புரியும்.
இது புரிந்தால் நான் உனக்கு தலை வணங்குவேன் நண்பி !
Bookmarks