Quote Originally Posted by tripidea View Post
இப்பொழுது எல்லோரும் இயற்கைக்கு எதிரான செயற்பாடுகளை செய்கின்றோம், இயற்கை எதற்காக உருவானது அதை நாம் என் அளிக்கிறோம? இயற்கையை பாதுகாப்பதும் நாம்தான் அதை அழிப்பதும் நாம்தான், இப்படியான இயற்கை நியதியை யார் உருவாக்கியது?

இயற்கைக்கு எதிரான செயற்படுகைளை என் மனிதன் மட்டும் செய்கின்றான், மிருகங்கள் கூட தங்கள் வாழ்க்கையை தங்களுடைய விதிமுறைக்கேற்ப வாழ்கின்றன ஆனால் நாம் ஏன் இப்படி மாறி விட்டோம்.

இயற்கை என்றால் என்ன அது ஏன் உருவானது என்னுடன் உங்கள் கருத்துக்களை பகிர்ந்துகொள்ளுங்கள்...
உயிர்கள் உருவாக்கப்பட்ட போதே, அவற்றின் வாழ்வுக்காக இயற்கையும் சேர்த்தே உருவாக்கப்பட்டுள்ளது. இயற்கையோடே அத்தனை உயிரினங்களின் வாழ்க்கையும் சிறப்பாக நடைபெற்று வந்தது.

மனிதர்கள் சிந்திக்கத் தொடங்கினார்கள். இயற்கையைப் பயன்படுத்தத் தொடங்கினார்கள். காலம் வேகமாக மாறியது. அறிவியலின் ஆதிக்கம் பெருகியது. விளைவு, மனிதன் தன் ஆடம்பர சொகுசு வாழ்க்கைக்காக இயற்கையை அழிக்க ஆரம்பித்தான்.

தற்போது இயற்கையின் அவசியத்தை அறிந்து மீண்டும் இயற்கையை உருவாக்க முயற்சிக்கிறான்.