Quote Originally Posted by tripidea View Post
நாம் செய்கின்ற எந்த ஒரு செயலும் அடுத்தவர்களிடம் இருந்து ஏதேனும் பிரச்சனைகளை கொண்டுவரும் என்பதை மனதில்கொண்டு செய்ய வேண்டும். ஏனென்றால் யார் என்ன செய்தாலும் அவர்களில் பிழை சொல்ல இந்த உலகமே வரும்.


ஆகவே நாம் எந்த ஒரு விடயம் செய்ய நினைத்தாலும் அடுத்தவர் கருத்தை கேட்டு செய்வது நல்லது, ஆனால் ஒன்றை மட்டும் மறக்க கூடாது நாம் செய்ய நினைத்த காரியத்தை அடுத்தவர் கருத்தை கேட்டு முடிவை நாம் மட்டுமே எடுத்து செய்ய வேண்டும்.


கருத்து கேட்பது நன்று ஆனால் முடிவு நம்கையில் மட்டுமே இருக்க வேண்டும் மறக்க கூடாது.
நீங்கள் சொல்லவது எனக்கு புரியவில்லை. யாருடைய கருத்தை கேட்டு செய்தாலும் நாம் செய்யும் காரியத்துக்கு எமக்கு தான் முடிவு கிடைக்கும். உங்களுடைய சுய சிந்தனையில் அதை செய்க்கிறீகள். அதை ஏன் நீங்கள் விரும்பிய முறையில் செய்ய கூடாது. நமது வாழ்க்கையை மற்றவர்கள் வாழப்போவதில்லையா நாம் தான் வாழ போகின்றோம் அதை ஏன் மற்றவர்களுக்கு பிடித்ததை போல் வாழ வேண்டும்? இருக்கிறது ஒரு வாழ்க்கை அதை நமக்கு பிடித்த மாதிரி வாழ்ந்து பார்ப்போம்.