மனம் ஒரு குரங்கு என்பதன் காரணம் அதன் விருப்பங்களும் ஆசைகளும் காலத்திற்கேற்ப மாறும் என்பதால் அன்றி அதன் உண்மையும் நேர்மையும் மாறும் என்பதால் அல்ல.
மனசாட்சிக்கு உண்மையாக நடந்தால் மனிதன் பிரச்சினை வரும் சமயத்திலும் உண்மையைச் சொல்வான், உண்மையாக நடப்பான்
Printable View
நாம் மற்றவர்களை ஏமாற்றவில்லை, அவர்கள்தான் ஏமாறுகின்றனர்.
கடலிலே மழைத்துளி விழுந்தாலும் அதுவும் உப்பாகத்தான் மாறும், மழைத்துளி விழுந்த கடல்தானே என்று அந்த நீரை பருக முடியாது அதே போலத்தான் இந்த உலகில் நல்லவர்கள் இருந்தாலும் அவர்களும் கெட்டவர்களாக மாற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.
நாம் எவ்வளவு நல்லவர்களாக இருக்கின்றோம் என்பது முக்கியம் அல்ல நாம் யாருடன் வாழ்கின்றோம் சேர்க்கின்றோம் என்பதே முக்கியம்.
இந்த உலகில் அதிகமாக கெட்ட எண்ணங்களும் கெட்ட சிந்தனைகளுமே அதிகமாக உள்ளது எனவே நாம் நல்லவர்களுடன் பழகினாலும் அவர்களையும் கெட்டவர்களாக மாற்ற வேண்டிய நிலை வரும்.
உலகுடன் ஒன்றாக வாழ பழகிக்கொள்வோம்.
மனம் குரங்கு போல மாறிக்கொண்டே இருக்கும் போது, மனச்சாட்சி எங்கே இருக்கும், இருந்தாலும் எப்படி நிலையாக இருக்கும்.?
மனிதன் குரங்கில் இருந்து வந்தான் எனவே அவனும் ஒரு போதும் மாற்றத்தை நிறுத்த மாட்டான், எனவே எந்த நல்லவனும் கெட்டவன் ஆகலாம், எந்த கெட்டவனும் நல்லவன் ஆகலாம். மாற்றம் உலகம் முழுதும் உள்ளது நாம் நிலையானதை தேடினால் கடைசியில் வெறும் கையுடன் நிற்க வேண்டிய நிலை வரும்.
நீங்கள் இந்த விடயத்தில் கூட கெட்டதை மட்டும் தான் சொல்லி இருக்கிறீர்கள். ஏன் உங்களால் கெட்டதை விட்டு வெளிய வர முடியவில்லை என்று எனக்கு தெரியவில்லை. நீங்கள் சொல்லி இருக்கிறீர்கள் கடலில் விழும் மழை துளி உப்பாக மாறுவதால் அதை பயன்படுத்த முடியாது என்று என் நீங்கள் இப்படி யோசிக்க தவறுகிறீர்கள், அந்த மழை துளி ஆற்றில் விழும் போது அது எல்லோராலும் பயன்படுத்த கூடியதாக மாறுகின்றது. எல்லாத்தையும் நீங்கள் கெட்டதாகவே பார்க்கின்ற மன நிலையை மாற்றி பாருங்கள் உங்களில் நிகழும் மாற்றங்களை நீங்களே உணருவீர்கள்.
ஆற்றில் விழுந்த மழைத்துளி நன்னீர் ஆகும் எல்லோருக்கும் பயன்படும், ஆனால் அந்த ஆறும் ஒருநாள் கடலுடன் கலக்கும். நல்ல எண்ணங்கள் எவ்வளவு சேர்ந்தாலும் நமது வாழ்வு இடையில் கெட்டதுடன் சேர்ந்து ஆகவேண்டிய காலம் இது.
ஒரு நல்லவன் ஒருவனுக்கு செய்கின்ற உதவி நன்மையானது, ஆனால் அந்த நன்மை பெற்ற ஒருவன் அந்த உதவி பெறுவதற்கு காரணம் ஒரு கெட்ட விஷயமாகவே இருக்கும்.
அந்த ஆற்று நீர் கடலுடன் கலப்பத்துக்கு முன் அதை நேர் வழியில் பயன் படுத்தி நன்மை பெறுபவர்களும் உள்ளார்கள் என்பதை நீங்கள் அறிந்ததில்லையா? இறுதியில் நடப்பதை வைத்து முடிவு பண்ணாதீர்கள் இடையில் எங்கள் வாழ்க்கையில் நடக்கும் நல்ல விடயங்களை பற்றியும் கொஞ்சம் யோசித்து பாருங்கள். சரி ஏன் நீங்கள் உங்கள் வாழ்க்கையில் கடந்து வந்த படிகளை கொஞ்சம் நினைத்து பாருங்கள் இவற்றையெல்லாம் தாண்டி தான் வந்திருப்பீர்கள். ஏன் நீங்கள் நல்லவராக இல்லையா நீங்களும் கெட்ட விடயங்களுடன் சேர்ந்து கெட்டவராக மாறிவிட்டீர்களா?
யாருமே பிறக்கும் போது கெட்டவராக பிறப்பதில்லை, இந்த உலக வாழ்க்கை அவர்களை கெட்ட வழியில் செல்ல தூண்டுகின்றது, எவ்வளவு நன்மைகள் செய்தாலும் அதை மறந்து நாம் செய்யும் ஒரே ஒரு கெட்டதை மட்டுமே பார்க்கின்றனர்.
நன்மைகள் செய்தாலும் தவறு, நன்மை பெற்றாலும் தவறு என்ற மனநிலை வந்துவிட்டது. எனவே நன்மைகள் பல செய்வோம் கெட்டவர் என்ற பெயர் பெறுவோம்.
உங்கள் கருத்தில் கொஞ்சம் கூட நிஜயாம் இருப்பதாக தெரியவில்லை. ஏன் என்றால் உதவி செய்யும் போது நீங்கள் உங்கள் சுய சிந்தனையில் யோசிப்பதில்லையா நான் ஒருத்தருக்கு உதவி செய்ய போகின்றேன் அது சரியா? நான் செய்ய போகும் உதவியால் வேற யாரும் பாதிக்க படுவார்களா? நான் உதவி செய்யும் நபர் நல்லதுக்காகவா அந்த உதவியை கேக்கிறார் என்று நீங்கள் சிறிதும் சிந்திக்காமலா உதவி செய்வீர்கள் ? நீங்கள் இதை கவனத்தில் கொண்டு நடந்தால் நீங்கள் செய்யும் உதவி பயனுள்ளதாகவும் மதிக்க கூடியதாகவும் இருக்கும் .