Quote Originally Posted by shahana View Post
ஏன் நீங்கள் உலகத்தை குறை சொல்லுகிறீர்கள் உங்களை போல் பொய்யான மனிதர்கள் வாழ்வதால் தான் உலகமும் பொய்யாக தெரிகிறது. இந்த உலகத்தில் உண்மையானவர்களும் இருக்கின்றார்கள் நீங்கள் அதை புரிந்து கொள்ளாமல் பொய்யானவர்களிடம் மட்டும் பழகுவதால் மட்டும் தான் உங்களால் உண்மை எது பொய் எது என்று புரிந்துகொள்ளும் மன நிலை இல்லை நீங்களும் அவர்களுடன் சேர்ந்து பொய்யான வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருக்கிறீர்கள். கொஞ்சம் பொய்யானவர்களை விட்டு விலகி வெளியில் வந்து பாருங்கள் உண்மையானவர்களை நீங்கள் அறிய கூடியதாக இருக்கும். உங்களை யாரும் ஏமாற்றவில்லை என்றால் நீங்கள் ஏன் அவர்களை ஏமாற்ற நினைக்கிறீர்கள் உண்மையாக பழகி பாருங்கள் அவர்களின் உறவிலும் உண்மை இருக்கின்றது என்பதை உணர்வீர்கள் .
நாம் மற்றவர்களை ஏமாற்றவில்லை, அவர்கள்தான் ஏமாறுகின்றனர்.
கடலிலே மழைத்துளி விழுந்தாலும் அதுவும் உப்பாகத்தான் மாறும், மழைத்துளி விழுந்த கடல்தானே என்று அந்த நீரை பருக முடியாது அதே போலத்தான் இந்த உலகில் நல்லவர்கள் இருந்தாலும் அவர்களும் கெட்டவர்களாக மாற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.


நாம் எவ்வளவு நல்லவர்களாக இருக்கின்றோம் என்பது முக்கியம் அல்ல நாம் யாருடன் வாழ்கின்றோம் சேர்க்கின்றோம் என்பதே முக்கியம்.


இந்த உலகில் அதிகமாக கெட்ட எண்ணங்களும் கெட்ட சிந்தனைகளுமே அதிகமாக உள்ளது எனவே நாம் நல்லவர்களுடன் பழகினாலும் அவர்களையும் கெட்டவர்களாக மாற்ற வேண்டிய நிலை வரும்.


உலகுடன் ஒன்றாக வாழ பழகிக்கொள்வோம்.